வருத்தம் தவிர்

வானமா கிழிந்தது? எந்தமலை பெயர்ந்தது?
ஏனடா நீ வருந்துகிறாய்?
காலமின்னும் இருக்கிறது; மீசைவெல்லத் துடிக்கிறது;
வீணாய் ஏன் புலம்புகிறாய்?
அரண்மனையில் பணிபுரிந்தால் அரசனென்று அர்த்தமில்லை;
சிங்கம்சிறை பட்டாலும், சிறுநரியாய் போவதில்லை;
வாழ்க்கையொரு பளிங்குத்தரை, அழகேனினும் வழுக்கிவிடும்;
மோதிவிடு முடிந்தவரை, மலையும்கூட இடிந்துவிடும்;
விழுந்துவிட்டால் வீறாதே; எழுந்துவிடு, தொடர்ந்துவிடு;
வலியெல்லாம் பெரிதல்ல; உள்ளமட்டும் பார்த்துவிடு;
காலம்வரும் பொறுத்திரு; பாய்வதற்கு பார்த்திரு;
அடக்கிபார்க்க நினைப்போரை, அகலத்தோண்டி புதைத்திடு;
பகைத்தொரைப் பொடியாக்கி, முன்னேறு போர்வென்று;
அகிலமே அறியட்டும், வருகிறவன் யாரென்று..!

எழுதியவர் : jeany (23-Jun-14, 12:26 pm)
பார்வை : 304

மேலே