jeany - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jeany
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Jan-2014
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  14

என் படைப்புகள்
jeany செய்திகள்
jeany - எண்ணம் (public)
31-Jan-2019 3:37 pm

என் அம்மா!!!  

மாசம்பத்து எனச்சுமந்து, காத்திருந்து பெத்தெடுத்து,
கண்ணப்போல வளத்துவிட்டு, கண்கலங்கும் என்னம்மா;
ராணியொனக்கு வாட்டமென்ன? தேனிநீயும் சோர்ந்ததென்ன?
என்னபெத்த மகராசி, சோகமென்ன சொல்லம்மா...

வச்சஇடத்தில் இருக்காம, சொன்னபேச்சி கேக்காம,
கொலுசுக்காலு சிணுசிணுங்க, வீடெல்லாம் நான்தவழ,
வேலையெல்லாம் விட்டுவிட்டு, வந்துஎன்ன தூக்கிக்கிட்டு,
சேட்டக்கார கொசவான்னு, அணைச்சிமுத்தங் கொஞ்சுவியே!

Camera'வ உன்அண்ணன் கொடுத்ததுந்தான் கொடுத்தாரு;
என்அப்பா வளைச்சிவளைச்சி என்னPhoto எடுத்தாரு;
எடுத்ததுல எதுலயும்நீ என்னப்பிரிஞ்சி நின்னதில்ல;
ரெண்டுபேரு கன்னத்துக்கும் இடவெளியே விட்டதில்ல;

மொதமொதலா பள்ளிக்கூடம், கொண்டுஎன்ன சேக்கயில,
"அம்மா... அம்மா..."னு, கதறித்தான் நான்அழுதேன்;
மனசக்கல்லு ஆக்கிகிட்டு, திரும்பிப்போன என்னவிட்டு;
வீடுபோயி நீயழுதத, வேறயாரு அறிவாரோ?

நாலுநாளு போகப்போக பள்ளிக்கூடம் பழகிப்போச்சி;
சாயங்காலம் வீடுவந்தா மணிகணக்கில் school'லு பேச்சி;
சொன்னதயே சொன்னாலும் சலிக்காம கேட்டிருப்ப;
ஆசமகன் பேசுறத இமக்காம பாத்திருப்ப!

இடுப்பிலென்ன தூக்கிவெச்சி, தெருவில்நீயும் நடக்குறப்ப,
விளையாடும் நண்பர்கள நான்பார்ப்பேன் கர்வத்தோட;
வீட்டுப்பாடம் சொல்லித்தருவ, நிலாச்சோறு ஊட்டிவிடுவ,
அப்பெல்லாம் தூக்கம்வரும், ஒன்முடிய நொணச்சாத்தான்!

யாரென்ன சொன்னாலும் நீநம்புவ, என்னத்தான்;
உன்கிட்ட துணிஞ்சதில்ல, நானும்பொய்யி சொல்லத்தான்.
அப்பாஎன்ன அடிக்கவந்தா, தடுத்துநிப்ப குறுக்கால;
நீசெய்யச் சொல்லியதா பழியஏற்ப எனக்காக!

பட்டினியா நான்கிடந்தா, பொறுக்காதே ஒம்மனசு;
கோவிச்சிக் கெடந்தாலும் கெஞ்சிஊட்டி விடுவியம்மா!
பாடத்தோட ஒழுக்கத்தையும் சேத்தெனெக்கு சொல்லித்தந்த;
ஒன்னபோல ஒருஅம்மா யாருக்கு கேடைச்சிருப்பா?

பட்டம்படிக்க வெளியூரு வந்ததுநான் செஞ்சதப்போ?
நிழலரும வெயிலுலதான் தெரியுமுன்னு, புரியுதிப்போ!
நான்நெனைக்க மறந்தாலும், நீயென்ன மறப்பதில்ல;
தூங்குனியா, சாப்டியானு, தெனமும்ஒன் அன்புதொல்ல!

படைச்சவனும் என்னப்பாத்து பொறாமதான் பட்டிருப்பான்,
இப்படியொரு தாய்ப்பாசம் அவனுக்கும் கெடைச்சதில்ல;
வாழுகிற நொடியெல்லாம், எனக்காக வாழ்பவளே!
ஒன்அன்புக்கு கைமாறா என்னத்த நானுஞ்செய்ய???

என்றும் உன் அடிகளில்,
- அன்பு மகன் ஜோயல்..!  

மேலும்

jeany - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2014 3:40 pm

தேர்வு முடிவுகள், தோல்வி என்றது;
இமைகளைத் தாண்ட கண்ணீர் முயன்றது;
வந்தவண்ணமாய் இருந்தஅழைப்புகளை,
நொந்தவண்ணமாய் பேசினேன்நான்;

பேசியவரெல்லாம் திட்டினார்... "படிடா" என்று;

என்அம்மாமட்டும் கெஞ்சினார்... "சிரிடா" என்று..!

கண்ணீரானதென் கைபேசி!!!

மேலும்

அன்னையின் அன்பு எப்பவும் அழகு !!!! 03-Oct-2014 10:47 pm
அன்னை அன்பிற்கு ஈடில்லை!! 29-Aug-2014 4:17 pm
என் அம்மாவை gnabaga paduthiteenga 29-Aug-2014 4:04 pm
தாய்மை. 29-Aug-2014 3:51 pm
jeany - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2014 10:01 pm

நீ அழகா -அல்ல
நான் அழகா ...

உன்னைப் பார்க்கும் என் கண்கள் அழகா -இல்ல
என்னைப் பார்க்கும் உன் கண்கள் அழகா .....

நீ என்னை பார்த்து சிரிப்பது அழகா -இல்ல
அதை கண்டு வெட்கப்படுவது அழகா ...

அவன் நெற்றி அழகா -இல்ல
அதிலிருந்து வழியும் வியர்வை அழகா ...

உன்னை காண தவிப்பது அழகா -இல்ல
உன்னைக் கண்டு துடிப்பது அழகா .....

தலை நிமிர்த்து நடப்பது அழகா -இல்ல
உன்னை கண்டு தலை குனிவது அழகா ...

உன் விரல்கள் அழகா -இல்ல
என்னை தீண்டும் பொழுது என்னில் ஏற்ப்படும் மாற்றம் அழகா ...

உன் பிரிவு அழகா -இல்ல
அதை நினைத்து ஏங்குவது அழகா ...

என்னருகில் நீ இருப்பது அழகா-இல்ல
உன்னருகில் நான்

மேலும்

அச்சாபம் தீண்டிய எவரும் கண்ணீரை கடந்து சிரித்திடும் நிலை கண்டு இருப்பார் ... ஆண்களும் கூட --- நன்றாக உள்ளது --- அருண் பா 25-Apr-2015 2:19 pm
இது அழகு!!! நடையழகு, உடையழகு, பாயும்பார்வைக் கணையழகு; சுருள்விழுந்த சிகையழகு, முத்துப்பல் நகையழகு; சிலநிமிடப் பகையழகு, நீபேசும் வகையழகு; வெட்கப்பட்டு போகும்படி, பார்க்கும்குறும்பு விழியழகு; கெஞ்சலோடு கொஞ்சியெந்தன், மனதைமாற்றும் மொழியழகு; ஒளிந்துவந்து கரங்களுக்குள், எனைவளைக்கும் பிடியழகு; காதுமடல் கடிக்கையிலே, குத்தும்மீசை முடியழகு; உன்மூச்சை நானுணர, ஒட்டிநிற்கும் நிலையழகு; முத்தமிட மாட்டாயா, எனத்தவிக்கும் நினைவழகு; நேரம்போவ தறியாமல், சாய்ந்துபேசும் தோழழகு; இடையில்நான் தூங்கிவிடின், மடிநீட்டும் காலழகு; தூங்காமல் என்துயில்நீ, இரசித்திருக்கும் இரவழகு; இருவருக்கும் கடவுள்தந்த, காதலென்ற உறவழகு; எனக்கே எனக்கான, என்னவனே நீயழகு; அன்புக்கு உயிரூட்டும், காதலுக்கு நாமழகு..! - JeanyMoni!!! 27-Aug-2014 9:13 pm
எனக்கு கவிதையை கற்றுத்தந்தது காதல்தான் தோழி. ஆனால் அது ஒரு பெண்ணிடமும் பிறக்குமென்பதை உன்னிடம்தான் கண்டுகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நின் கவி வளரவும், உன் காதலுடன் நீடு வாழவும் தோழனின் வாழ்த்துக்கள்..! 26-Aug-2014 11:42 pm
காதல் என்பது வரம் அல்ல சாபம் -அச் சாபத்தை வேண்டாமல் இவ்வுலகில் யாரும் இல்லை ...///:) super 26-Aug-2014 12:59 am
jeany - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2014 7:34 pm

உறவினர்கள் புடைசூழ, நண்பர்களின் படைசூழ,
பெண்பார்க்கும் படலத்தில் முன்னிலையில் நான்;
எதிரேபெண் வீட்டாரும், ஊராரும் சுற்றாரும்,
தாம்பூலத் தட்டோடு அமர்ந்திருந்தோர் தான்;
தேவதையின் வருகைக்காய் எல்லாரும் காத்திருந்தோம்;
எந்தநொடி வருவாளென வாசலையே பார்த்திருந்தோம்;
தேநீரைத் தட்டொன்றில் ஏந்திவந்த தாரகையை,
கண்டதுமே தொலைத்தேனே இணைபிரியா என்மனதை;
குனிந்ததலை நிமிரவில்லை, பார்வைமட்டும் சுழன்றது;
பட்டுவேட்டி சட்டைகண்டு எந்தன்மீது நின்றது;
நானும்நோக்கி விட்டதனால், நாணம்தாங்க மாட்டாமல்,
ஏனொயெனை தவிர்த்துவிட்டாள், தேநீரை நீட்டாமல்;
"மாப்பிளைக்கு கொடம்மா"என அவள்தந்தை ஆணையிட,
வெட்கத்திலே அவள்கன்னம்

மேலும்

அருமை... நட்பே.... தொடருங்கள்.... 27-Aug-2014 3:09 am
wow.... super......! 26-Aug-2014 12:55 am
மோதிக்கொண்ட பார்வைகளால், நிலைகுலைந்தோம் இருவருமே; எங்களுக்கு நினைவில்லை, எமைத்தவிர ஒருவருமே; மணத்தேதி குறித்தபடி நிறைந்தது அவ்விழா ============================================= வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்... அழகு வரிகளில் அருமை! வாழ்த்துக்கள் !! 25-Aug-2014 8:10 pm
jeany - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2014 12:40 pm

வானின்று தரைவந்து நடந்த வெண்ணிலவொன்று,
நீராட வருகையிலே கண்டதென் கண்ணின்று;
ஆணொருவன் இருப்பதை அறியாத பேதையாய்,
நங்கையவள் நதிநீரில் மென்பாதம் இறக்கிட்டாள்;
நீராட மேலாடை தடையென்றொ என்னவோ,
மெய்மறைத்த மெல்லாடை சட்டென்று விலக்கிட்டாள்;
அவள்கொண்ட பெண்மைதனை உள்ளாடை மறைத்துநிற்க,
இமைக்காத கண்ணிரண்டை வலிந்துநான் திருப்பிட்டேன்;
அந்நியரின் அந்தரங்கம் அறிவதழ கல்லவென்று,
அமர்ந்திருந்த பாறைவிட்டு எழுந்துசெல்ல முற்பட்டேன்,
வெகுஅருகில் வேங்கையொன்று அவளின்பின் வந்துநின்று,
பாயக்குறி பார்ப்பதைக் கண்டுநானும் திடுக்கிட்டேன்;
தலைகாலும் புரியாமல், செய்வதொன்றும் அறியாமல்,
இடையிருந்த உடைவாளை வலக்கையால் உ

மேலும்

அழகு !!! 27-Sep-2014 8:16 pm
jeany - jeany அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 12:26 pm

வானமா கிழிந்தது? எந்தமலை பெயர்ந்தது?
ஏனடா நீ வருந்துகிறாய்?
காலமின்னும் இருக்கிறது; மீசைவெல்லத் துடிக்கிறது;
வீணாய் ஏன் புலம்புகிறாய்?
அரண்மனையில் பணிபுரிந்தால் அரசனென்று அர்த்தமில்லை;
சிங்கம்சிறை பட்டாலும், சிறுநரியாய் போவதில்லை;
வாழ்க்கையொரு பளிங்குத்தரை, அழகேனினும் வழுக்கிவிடும்;
மோதிவிடு முடிந்தவரை, மலையும்கூட இடிந்துவிடும்;
விழுந்துவிட்டால் வீறாதே; எழுந்துவிடு, தொடர்ந்துவிடு;
வலியெல்லாம் பெரிதல்ல; உள்ளமட்டும் பார்த்துவிடு;
காலம்வரும் பொறுத்திரு; பாய்வதற்கு பார்த்திரு;
அடக்கிபார்க்க நினைப்போரை, அகலத்தோண்டி புதைத்திடு;
பகைத்தொரைப் பொடியாக்கி, முன்னேறு போர்வென்று;
அகிலமே அறியட்ட

மேலும்

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி தோழரே!!! 23-Jun-2014 12:37 pm
சிங்கம்சிறை பட்டாலும், சிறுநரியாய் போவதில்லை; வாழ்க்கையொரு பளிங்குத்தரை, அழகெனினும் வழுக்கிவிடும்; மோதிவிடு முடிந்தவரை, மலையும்கூட இடிந்துவிடும்; ......அகிலமே அறியட்டும், வருகிறவன் யாரென்று..! இது இதுதான் வேண்டும் வாழ்வை எதிர்கொள்ள!! அருமையான கவிதை!! :) 23-Jun-2014 12:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜோசப் மரியநாதன்

ஜோசப் மரியநாதன்

பாண்டிசேரி
யாதிதா

யாதிதா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
மேலே