jeany- கருத்துகள்

இது அழகு!!!
நடையழகு, உடையழகு,
பாயும்பார்வைக் கணையழகு;
சுருள்விழுந்த சிகையழகு,
முத்துப்பல் நகையழகு;
சிலநிமிடப் பகையழகு,
நீபேசும் வகையழகு;
வெட்கப்பட்டு போகும்படி,
பார்க்கும்குறும்பு விழியழகு;
கெஞ்சலோடு கொஞ்சியெந்தன்,
மனதைமாற்றும் மொழியழகு;
ஒளிந்துவந்து கரங்களுக்குள்,
எனைவளைக்கும் பிடியழகு;
காதுமடல் கடிக்கையிலே,
குத்தும்மீசை முடியழகு;
உன்மூச்சை நானுணர,
ஒட்டிநிற்கும் நிலையழகு;
முத்தமிட மாட்டாயா,
எனத்தவிக்கும் நினைவழகு;
நேரம்போவ தறியாமல்,
சாய்ந்துபேசும் தோழழகு;
இடையில்நான் தூங்கிவிடின்,
மடிநீட்டும் காலழகு;
தூங்காமல் என்துயில்நீ,
இரசித்திருக்கும் இரவழகு;
இருவருக்கும் கடவுள்தந்த,
காதலென்ற உறவழகு;
எனக்கே எனக்கான,
என்னவனே நீயழகு;
அன்புக்கு உயிரூட்டும்,
காதலுக்கு நாமழகு..!

- JeanyMoni!!!

எனக்கு கவிதையை கற்றுத்தந்தது காதல்தான் தோழி. ஆனால் அது ஒரு பெண்ணிடமும் பிறக்குமென்பதை உன்னிடம்தான் கண்டுகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நின் கவி வளரவும், உன் காதலுடன் நீடு வாழவும் தோழனின் வாழ்த்துக்கள்..!

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி தோழரே!!!


jeany கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே