தமிழன்னையே எங்கள் அன்னை

உணர்வின் பாதையில் பிறிட்டெழுந்த
வைர வரிகளாய் இதோ
இன்றெந்தன் கவிதை வரிகளாய்
தமிழ் அன்னையின் பாதமலர்களை
சத்தமின்றி முத்தமிடுகிறது....

தமிழன்னையே எங்கள் அன்னையே!

அழும் குழந்தையின்
தாலாட்டு நீ!
ஆர்பரிக்கும் மொழிகளில்
ஆதியும் நீ!
இலக்கண சொல் சுவைகளில்
தேன் சுவை நீ!
ஈராயிரம் மொழிகளில்
செம்மொழியானவள் நீ!
உள்ளத்தின் எண்ணங்களை
திறம்பட சொல்பவள் நீ!
ஊசி முனை சொற்களிலும்
உவகை தருபவள் நீ!
எண்ணத்திலும், எழுத்திலும்
எழுச்சி தருபவள் நீ!
ஏதேதோ மாற்றங்களிலும்
மாறாதவள் நீ!
ஐயமின்றி உரையாட
உறுதுனையானவள் நீ!
ஒற்றை சொல்லிலும்
பொருள் படுபவள் நீ!
ஓதும் மொழிகளில்
ஒளிமயமானவள் நீ!
ஒளவைக்கு அறிவினை
அருளியவள் நீ!
எஃகினை போல்
நிலைத்து நிற்பவள் நீ!

உங்கள் வழியில்.....
மணிசந்திரன்

எழுதியவர் : மணிசந்திரன் (23-Jun-14, 7:04 pm)
பார்வை : 95

மேலே