கண்ணதாசனுக்கு கவின் சாரலனின் கவிதாஞ்சலி 1
கண்ணன் குழல் தொட்டு
கவி பாடும் இசை மன்றம்
சுவை சொட்டும் திரைக் கவிதைத்
தமிழ் பொழியும் கார் மேகம்
கவித் தென்றல் குளிர் தொட்டு
விரிந்த மலர்த்தோட்டம்
காவிரிக்குப் பின் தமிழ் கண்ட
கண்ணதாசன் எனும் கவிதைப் பிரவாகம்
----கவின் சாரலன்
கவிக்குறிப்பு : மறு பதிவு

