தமிழ் காற்று
தமிழ் பற்று
உயிர் யற்று போகமல்
ஏதோ சற்று வாழ்கிறது
அதை விற்று
ஆங்கில கொடி நட்டு போகாது
உயிர் கற்று மெய் உணர்ந்து நீயும்
தமிழுக்கு ஏது ஓர் முற்று
என்று சொல்லி போற்று............
சேற்று மொழி
வேற்று மொழி வந்து
தமிழ் நாட்டை இன்று
துர்நாற்றம் செய்தாலும்
காற்று வாங்கும் தமிழா, தமிழ்
தோற்று போக நீ இங்கு
வீற்றிப்பது முறையா...........?
தமிழ்
வெறும் கீற்று அல்ல
பெரும் புயல் காற்று
என்று உலகிற்கு காட்டு
இறக்கும் தமிழ் மொழி என்று
சொன்னார்கள் நேற்று
நாம் இருக்க தமிழுக்கு
இறப்பில்லை என காட்டு
நம் மொழியை போற்று
ஏணிதனில் ஏற்று
உணர்வுள்ள தமிழர்க்கு
தமிழ் தானே தமிழ் தானே
உயிர் கொடுக்கும் காற்று...........!