என் உயிர் பிரியும் அந்த நிமிடம் 555

பிரியமானவளே...

என் உயிர் பிரியும்
அந்த நிமிடத்தில்...

நினைவுகள் எல்லாம்
அடங்கிவிடும்….

நினைவுகள் அடங்கும்
அந்த நாளில்...

உன் நினைவும்
அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான்...

உன் உயிர் பிரியும் நாள்வரை
வாழவேண்டுமென்ற...

எண்ணங்கள் வருதடி
எனக்கு...

வலிகள் ஆயிரம்
இருந்தாலும்...

நான் நானாகவே மீண்டும்
பிறக்க விரும்புகிறேனடி...

உதயமாகும் பௌர்ணமி
நிலவை போல...

நான் உதிப்பேனடி
மண்ணில் மீண்டும்...

என்னவளே உன்
அன்பிற்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Jun-14, 8:04 pm)
பார்வை : 357

மேலே