+பன்னீராய் சாரல் மழை+

கைவீசி கைவீசி நான்நடக்க‌
கண்பேசி கண்பேசி நீநடக்க‌
பலகண்ணும் நம்நடைய பார்த்திருக்க‌
சிலகண்ணில் பொறாமையாய் தீப்பிடிக்க‌

கீழ்வானம் இதழ்போல சிவந்திருக்க‌
மேல்வானம் மின்னல்கொண்டு கண்ணடிக்க‌
பன்னீராய் சாரல்மழை நமைநனைக்க‌
தண்ணீரால் நனைந்தமனம் மகிழ்ந்திருக்க‌

ஒளிமயமான எதிர்காலமொன்று காத்திருக்க‌
வலிகலெல்லாம் பயந்துபல திசைபறக்க‌
ஆனந்தமாய்வரும் கண்ணீர்கூட வரமறுக்க‌
இத்தருணம் நிலைத்திருக்க மனம்நினைக்க‌

எல்லோருக்கும் இன்பம்மட்டும் நிலைக்கட்டும்
நல்லோருக்கு மகிழ்ச்சிமட்டும் கிடைக்கட்டும்
இருப்போரெல்லாம் இல்லாருக்கு உதவட்டும்
இல்லாரும் எல்லாம்பெற்று வாழட்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Jun-14, 9:23 am)
பார்வை : 208

மேலே