அன்ன தானம்

தானத்திலெல்லாம் சிறந்த
தானம் அன்ன தானம்
ஒரு உயிரின் பசி போக்கிட
உன்னால் முடிந்தாலே
அதன் சிறப்பை எடுத்து சொல்லவும்
வேண்டுமோ?
ஆருயிராய் அனைத்துயிரையும்
நீ நினைத்தாலே அது போதுமே
குத்துயிராய், குலை உயிராய்
கிடக்கும் பல உயிர்களையே
காத்திடு கொஞ்சம் உணவு தந்தே
நீ செழித்து, உன் நிலை உயர்ந்து
வாழ்ந்திடுவாய் கடை மூச்சு
வரையிலே