ஆண்கள் என்னும் அற்புதம்
ஆன் என்றால் பொறுப்பில்லாதவன்
குடிகாரன் பொம்பளை பொருக்கி
என்று அடுக்காய் குற்றசாட்டுகளை
அடுக்கி வைத்திடும் சமுதாயத்திற்கு .......
ஏழையாய் பிறந்தும்
இலக்கின் உச்சத்திற்கு
பயணிக்க விரும்பும் எத்தனையோ இளைஞர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள் ...........
கொலைகாரர்கள் மத்தியில்
கொள்கைக்காரர்கள் தெரியவதில்லை
அடித்து பிடுங்குபவர்கள் மத்தியில்
வாரிக்கொடுப்பவர்கள் தெரியவில்லை .......
உழைத்து உழைத்து சலித்துப்போய்
முரட்டு முகங்களோடு
உலவுகின்ற உருவங்களைத்தான்
உலகம் ஒதுக்குகிறது ........
படிக்கும் வயதிலே
அனுபவத்தையும் சேர்த்து படித்த
எத்தனையோ இளைஞர்களை
இன்றுவரை உலகம் அறிந்ததில்லை .........
அம்மாவின் மருத்துவ செலவு
அப்பாவின் வீட்டுக்கடன்
தங்கையின் கல்யாணம் அக்காவின் மகப்பேறு
என்று நீள்கிறது இவர்களின் பொறுப்பு பட்டியல் ........
எத்தனையோ உடன்பிறப்புகளை கரைசேர்த்து
கல்யாணத்தை கூட
கடமைக்காக ஏற்பவர்கள்
இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் ........
பொதுவாழ்க்கைக்காக போராடி வாழ்ந்த
மனிதர்கள் மத்தியில்
குடும்பவாழ்கைக்காக போராடுபவர்கள்
தியாகிகளாக தெரிவதில்லை ..........
சில்லறைகளை கூட சிக்கனமாய் சேமித்து
உண்டியல் சேமிப்பிலே
உலகத்தை எத்தனையோபேர்
கடந்துகொண்டுதான் இருக்கின்றனர் .........
குடித்துவிட்டு கிடக்கும்
பொறுப்பற்ற சிலரின் செயலுக்காக
கூலிவேலை செய்து குடும்பத்தை நகர்த்துபவர்கள்
ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை ..........
தங்கையின் சீருக்கு தலையை அடகுவைத்து
பட்டுமெத்தை வாங்கித்தந்து
கட்டாந்தரையில் கரைபவர்கள்
இன்றும் உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது .........
தவணை முறையிலே
தங்கைக்கு வண்டி வாங்கித்தந்து
அரசாங்க பேருந்திற்கு
காத்திருக்கும் அண்ணன்கள் ஆயிரம் ஆயிரம் .....
அம்மாவின் அன்பும் அப்பாவின் அக்கறையோடு
மட்டும் முடிவதில்லை குடும்ப வாழ்க்கை
அதையும் தாண்டி
உடன் பிறந்தவனின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது ..........
தங்கைகளை சீரோடு அனுப்பிவிட்டு
சீரழிந்துபோகும் எத்தனையோ
இளைஞர்களின் வாழ்க்கை
இன்றுவரை வரலாற்றியில் எழுதப்படாமலேயே ........
பொறுப்பற்றவர்களின் மத்தியில்
பொறுப்பு உள்ளவர்களோடுமே
உலகம் உருள்கிறது
என்ற உண்மையை உணருங்கள் ........