நீயில்லா ஒரு நாள்

உன்னுடன் பேசாமல்
ஒரு நாள் முழுவதும்
இருந்து விட முடியுமா?
என்றால், இருந்து விடுவேன்.....
அன்று மட்டும்
நீ பேசுவதை
ரசிப்பதற்கு விடுமுறை!
நீ என்ன
பதில் அளிப்பாய் என
யோசிப்பதற்கு விடுமுறை!
உன்னிடம் அடுத்து
என்ன பேசலாம் என
நினைப்பதற்கு விடுமுறை!
உன்னை கோபப்படுத்தி
ரசிப்பதற்கு விடுமுறை!
நீ என்னிடமும்,
நான் உன்னிடமும்
கெஞ்சுவதற்கு விடுமுறை!
இத்தனை தொலைத்தும்
உன்னிடமிருந்து
பதில் வராத நாள்
எப்படி இருக்கும்
என்னுள்??!!
உன் நினைவுகளிடம்
மட்டும் பேசி கொண்டு!
உன் நிழற்படத்திடம்
மட்டும் பேசி கொண்டு!
உன் உரையாடலை
மட்டும் திரும்ப பார்த்து
ரசித்து கொண்டு!
உன் உருவங்களை
கற்பனையில் வரைந்து
அதனுடன்
விளையாடி கொண்டு!
நீ என்ன செய்து கொண்டு இருப்பாய்
என நினைத்து கொண்டு!
நீ எப்போது பேசுவாய்
என நினைத்து கொண்டு!
இத்தனையும் ரசித்திட
ஒரு நாள் என்ன,
ஒரு யுகம் கிடைத்தாலும்
வாழ்ந்து விடுவேன்..
இடைவிடாத உன் நினைவுகளுடன்!