கண்ணதாசனுக்கு கவின் சாரலனின் கவிதாஞ்சலி 3
இரண்டு மனம் வேண்டும்
-----------------------------------------
இரண்டு மனம் கேட்டு
இறைவனை வேண்டினேன்
நினைத்து அவளை மனதில் வாழ்த்திட ஒன்று
நினைவுகளில் அவளை கவிதையில் எழுதிட ஒன்று
இரண்டு வரமும் இறைவன் தந்தான்
நித்தமும் நிலவில் மாலையில்
சந்தித்தோம்
சிரித்தாள் எழுதினேன்
சிவந்தாள் எழுதினேன்
காத்திருந்து எழுதினேன்
காதலினால் எழுதினேன்
ஏனோ ஒரு நாள் மாறினாள்
மறந்தாள் பிரிந்தாள்
அவளுக்கும் ஏன் இரண்டு மனம்
கொடுத்தாய் இறைவா
சிரித்திட ஓன்று மறந்திட ஒன்று
என்று இறைவனிடம் அழுதேன்
கதறினேன்
மீண்டும்
"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று "
---கவின் சாரலன்
கவி குறிப்பு :கடைசி வரிகள் நான் போற்றும்
கவிஞர் கண்ணதாசனுடையது