நாட்குறிப்பு DIARY

யாரிடமும் எதற்கும்
என் கதையை
சமர்ப்பிக்கவேண்டிய
அவசியமில்லை
உன்னைத் தவிர............
உன்னிடமும் சொல்லி
என் ஆற்றாமையை
வெளிப்படுத்த விருமபில்லை!

எனக்கு கவிதைகள்
எழுதத் தெரியாது!
வார்த்தைகளைக்
கோர்க்கத்தெரியாது!
இலக்கணம் இலக்கியம்
யாப்பு அணி சந்தம்
இவற்றில் ஒன்றும்
நான் கற்றுத் தேறவில்லை!
இவைஎன் புலம்பல்களே..........
சொல்ல வந்ததை சொல்லாமல்
எழுத நினைத்ததை எழுதாமலே
செல்கிறேன்..........


நான் போகிறேன்
எனக்கான இடம் தேடி.....
உன்னிடம் சமர்பிக்கவேண்டிய
என் கதைகளை
என் நாட்குறிப்பில்
உனக்காக சேமிக்கிறேன்..........
என்றேனும் ஒருநாள்
எனைத்தேடி நீ வருவாயானால்
அன்று உனக்காகக்
கிறுக்கப் பட்ட
இந்த நாட்குறிப்பு
என் மனதில்
உன்னை சுமந்த
காவியத்தை
உன்னுடன் பேசும்...............

நீ என்னுடன் வாழ்ந்த
நாட்களின் வசந்தங்களின்
நினைவுகளுடன் போகிறேன்!
உன்னிடம் அன்பு ஒன்றைத்
தவிர வேறொன்றும்
நான் யாசித்திலேன்!
உன்னை விட்டு
பிரிய நினைக்கும்
பொழுதுகளில்
நான் தோற்றுப் போகிறேன்................

இது என் நாட்குறிப்பு
என் உள்ளத்தின் சுமைதாங்கி '
உன்னிடமில்லா தாய்மடி!
என் உள்ளத்தின் எண்ணமறிந்து
என்னுடன் உரையாடும்
என்னுயிர்த் தோழன்!
நான் போகிறேன்
உன்னைவிட்டல்ல!
என்னைவிட்டு ............
என்னைத் தேடாதே............
..................இப்படிக்கு உன் தேனினுமினியவள்!

.....................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (25-Jun-14, 12:30 pm)
பார்வை : 215

மேலே