மாற்றான் தோட்டத்தில் பூத்த மல்லிகை பூவே
மாற்றான் தோட்டத்தில் பூத்த
மல்லிகை பூவே
நீ மணப்பது ஏனோ? அதிகமே
எந்தன் தோட்டத்தில் மலர்ந்த
மல்லிகையை விடவே
நானும் தான் எந்தன் செடிக்கு
நீர் வழங்கினேன், உரம்
செலுத்தினேன்
தினமும் அதனுடன் பேசி
மனம் மகிழ்கிறேன்
ஆனாலும் அது ஏனோ?
மணத்தினில் குறைந்தது,
அடடா....! என்ன தொல்லையடா...!
எந்தன் எஜமானனும் சொல்வது
இதை தானடா
எனக்கு மணம் குறைவென்றே
உந்தன் தோட்டத்து செடி மலரை விடவே
இது ஏனடா? கொஞ்சம் நிறைவு கொள்ளடா
உனக்கென்று இறைவன் கொடுத்த
மல்லிகையும் உண்டு, அதில் மணமும்
உண்டு
என்றும் அடுத்தவரிடம் இருப்பதை
ஒப்பிட்டு மன உழற்சி கொள்ளுவதே
மனிதனின் வேலையடா?
அதனால் தான் உங்களுக்க் என்றும்
தொல்லையடா....!