இருக்கும் போது வாழ்ந்து விடு, இன்பத்தை தேடி அடைந்து விடு

முதலுக்கும், முடிவுக்கும்
நடுவினிலே

தானே வாழ்விருக்கு

முடிந்த பின் என்ன பயன்
யாருக்கு?

இருக்கும் போது வாழ்ந்து
விடு, இன்பத்தை தேடி
அடைந்து விடு

இல்லாத துன்பத்தை
தேடி வருந்தாதே

இருந்தாலும் துன்பம்
கொஞ்சம், அதை
வளர்க்காதே

எப்போதும் ஏதோ ஒரு
காரணம் நீ மகிழ
தேடி கொள்

சந்தர்ப்பங்கள் வரும்
போது அதை ஏற்று கொள்

நீ சந்தோஷம் கண்டிட
ஓராயிரம் காரணம்
உண்டு பூமியிலே

நீ சோகத்தில் நிலைத்திட
இருந்தாலும் அது
போல நூராறு
காரணங்களே

சோகத்தை ஒதுக்கி
இன்பத்தை பெருக்கி
வாழ்ந்திட பழகி கொள்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (25-Jun-14, 2:17 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே