தேடலில் நான்
கனவுகளை
இரவினிலே தொலைத்தேன் !
வாழ்க்கையை
பகலில் தொலைத்தேன் !
பொருளற்ற பாதைகளில்
திசை தெரியாமல் அலைந்தேன் !
இலக்குகள் இல்லா வாழ்வில்
திக்குத் தெரியாமல் பரிதவித்தேன்!
பழைய டையிரியின் காகிதக் கிறுக்கல்கள்
போலாகிவிட்ட வாழ்வில்
வானத்தையும் பூமியையும்
மாறி மாறிப் பார்க்கிறேன் !
விரிந்த வானில் ஓர் விடிவெள்ளிக்காக
வாழ்க்கைக் கதையின்
புதிய அத்தியாயத்தை எழுதிடும்
ஆரம்ப வரிக்கான
தேடலில் நான்......
-----கவின் சாரலன்