குப்பை தொட்டிக்குள்
வறுமையிலும்
வயிற்ரை நிறைத்தான்
ஒரு காமுகன்..
கரைக்க காசில்லாமல்
தான் -என்னை
விட்டுவைதாளோ...
நான் வெளிச்சத்திற்கு
வந்த நாள் தான்
தெரிந்தது
என் வாழ்க்கை முழுவதையும்
இருட்டில் விட்டு சென்றாள்
என் தாய் என்று..
உதிரம் படிய
உதறிவிட்ட தாயை விட
உயிரற்ற
குப்பை தொட்டி காக்கும்
என நம்பியிருப்பாள் போலும்...
வழிப்போக்கன் பார்ப்பானோ?
வாசனையால் நாய் முகருமோ?
வயிற்று பசியால் சாவேனோ?
தெரியவில்லை..
யாரேனும் போய் கூறுங்கள்
என் தாயிடம்
கண்ட இடத்தில் வீசுவதற்கு
கருச்சிதைவு மேல் என்று..
அந்த
காமுகநிடமும் சொல்லுங்கள்
காமம்-குப்பை தொட்டியை
குழந்தை சுமக்க
வைக்ககூடாது என்று..