பூமியிலே ஒரு நாள்

பூமியிலே ஒரு நாள்
கிராமத்து பகுதியில்

நான் வலம் வந்தேன்
அதன் அழகினை கண்டு
ரசித்திடவே

பச்சை பசேலென்ற புல்
வெளிகள், அதை உணவாக்கி
கொண்டிருக்கும் ஜீவ ராசிகள்

ராட்சச தனமாய் வளர்ந்து
பூமியை வேர்கள் ஆக்ரமிக்க
நின்றிருக்கும் மரங்கள்

அதன் கிளைகளில் அமர்ந்து
ஒன்றுக்கொன்று அலகால்
கொஞ்சி மகிழும் கிளிகள்

அதன் பல வர்ண நிறங்கள்

பாதை ஓரங்களில் இளநீ
விற்கும் வியாபாரிகள்
அவர் அதை சீவும் லாவகங்கள்

சோளக்கதிர் விளைந்து
உயர்ந்து நிற்கும் வயல் வெளிகள்
அருகில் அமர்ந்திருக்கும்
சில முதியவர்கள்

சிறிதே தொலைவில்
நெற்கதிர் பூத்து குலுங்கும்
வயல்கள்

அங்கும் இங்கும் தேங்கி
இருக்கும் நீரில் நீந்தும்
அன்னங்கள், அதன் தூய
வெண்மைகள்

ஒரு புறம் வாத்து
கூட்டம், அதை மேய்க்கும்
சிறுவன்

இதெல்லாம் மனதினில்
நிறைத்து, மகிழ்ந்து
நடந்திட

ஒரே ஒரு காட்சி மட்டும்
நெஞ்சினில் வருத்திட

அங்கோர் முதியவள்
அமர்ந்திருந்தாள் மரநிழலில்

அவள் இயலாமை அவள்
நிலையில் தெரிந்தது

அவள் இல்லாமை அவள்
நெலிந்த தேகத்தில் புரிந்தது

கண் பார்வையில் ஏக்கங்கள்
அவள் வாழ்வினின் சோகத்தை
எடுத்து சொல்லும் வேதங்கள்

எனக்குள்ளே வெறுமை...!

இத்தனை அழகினை பூமிக்கு
தந்த இறைவன், இங்கோர்
உயிருக்கு ஒளி ஏன் தரவில்லை?

இந்த கேள்விக்கு பதில் இல்லை
இது போன்ற பல கேள்விகளுக்கு
எனக்கு பதில் கிடைக்கவில்லை

ஆயினும் நான் கேட்பதை
நிறுத்தவில்லை

என்னால் முடிந்தது அந்த
முதியவள் வயிற்றுக்கு
கொஞ்சம் உணவும்

அவள் கைகளில் கொஞ்சம்
காசும்

கிழிந்த உடை அணிந்த அவள்
உடலுக்கு எந்தன் மேல் துண்டை
போர்வையாகவும்

தர மட்டுமே....!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (25-Jun-14, 2:03 pm)
சேர்த்தது : nimminimmi
Tanglish : poomiyile oru naal
பார்வை : 85

மேலே