கலைக்கு செல்வி

மின்னல் அவள் புன்னகை !
கோடை இடி அவள் கோபம் !
அதனால்தானோ என்னவோ
அடிக்கடி கொட்டுகிறது மழை
அவள் கண்களில் மட்டும் !
அழுதாளும்கூட அழகாய்த்தான் இருக்கிறாள்
என் அக்கா !
அடுத்த நொடியே புன்னகைப்பாள் நான் அக்கா என்றால் !
அன்பும் பண்பும்தான் அவள் சொத்து
அறிவியலும் ஆராய்ச்சியுமே அவள் மூச்சு
வேலையில் இறங்கிவிட்டால் வெளிவராது பேச்சு !
செல்லில் பேசும் பலருள்ளும்
செல்லைபற்றி (விலங்கு செல்) மட்டுமே பேசும்
அவள் வடிவில்
காண்கிறேன் நான் கலைமகளை
செல்விதான் அவள்
என்றாலும் திருமதிகளைத்
தோற்கடிக்கும் மதி அவளுக்கு !
என் சகோதரி என்பதற்காக அல்ல
சகலத்திற்கும் அவள் கலைமகள்தான் (கலைச்செல்வி)
என் சகோதரி