காதல் ஏழை
இரு இதயத்தை,
ஒரு இதயமாக்க விடுத்த,
காதல் விண்ணப்பத்தை ஏற்க மறுத்து,
ஒரு இதயத்தை இரண்டாகினாள் !
என்னை சுற்றி திரியும் நண்பர்களுக்கு
அவள் மேல் நான் வைத்த காதல்,
புரிந்த அளவில் ஒரு பகுதி கூட
என்னை அவள் பின்
சுற்றவைத்தவளுக்கு புரியவில்லை!
ஆடி காருக்கு சொந்தக்காரி,
ஆக ஆசை அவளுக்கு!
என் ஆறு கவிதைகளுக்கு,
சொந்தக்காரியானாள்!
நினைவு முழுக்க அவளின் முகம்,
இதயத்தையே பரிசாய் கொடுக்க நினைக்கும்,
நான் காதல் தோல்வியுற்றவனா?
என் உன்னதமான அன்பை ஏற்க மறுத்த
அவள் காதல் ஏழையா?