ஓர் எழுத்தை நான் எழுதுகையில்

ஓர் எழுத்தை நான் எழுதுகையில்
உன் நினைப்பு தான் என் மனதிலே

எழுது கோலை காகிதத்தில்
ஊன்றுகையில், உந்தன் உறவு
தான் உயிரெழுத்துக்களாய் அதிலே

சித்திரங்கள் நான் வரைந்திட
தாள் எடுத்தால், உன் உருவம்
கண் முன்னே

சிலை ஒன்றை நான் கண்டால்
அதன் முகம் உன் முகமாக
மாறியதே

சிரிப்பொன்றை நான் ரசித்தால்
சிறு நொடியில் அது உன் சிரிப்பாய்
ஒலித்ததே என் காதிலே

சிங்காரம் இல்லாமலும், ஒய்யாரம்
உனக்கிருந்தது, அந்த அகங்காரமோ
என்னை தூர தள்ளியது

சிறை பட்ட என் மனதை, மீட்டால்
மறுபடி எங்கும் அடமானம்
வைத்திட மாட்டேன்

சிலுவைகள் தேடி நானே என்னை
அறைந்து கொண்டிட மாட்டேன்

சிலந்தி வலை தான் காதலும்,
தானாக சென்று மாட்டிக்கொள்ளும்
பூச்சிகள் தான், என் போன்ற ஆண்கள்

சிதைக்காமல் என் மனதை
திருப்பி கொடு, திருடாமல்
என் உணர்வை விட்டு தள்ளு

சிந்தனைகள் மாற்றி,
வேதனைகள் ஆற்றி, நான் வாழ
வேண்டும், இந்த உலகிலே

சிறிதேனும் காண வேண்டும்
நிம்மதி என் வாழ்விலே

சில நேரமேனும் என்னை
நானாக நான் கண்டிட
வேண்டும், கண்ணாடியில்

சிக்காமல் தவிர்ப்பேன், இனி
ஒரு நாளும் உன் போன்ற
அகங்காரம் நிறைந்த பெண்ணிடம்

சிதறாமல் தடுப்பேன் என்
எண்ணங்களை, வேண்டாத வழியில்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (27-Jun-14, 2:22 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 212

மேலே