இனியவை

இந்தப் பூக்கள்
கண்களுக்கு மட்டுமே
வான் நட்சத்திரங்கள்

கீழே விழுந்தும்
உடையவில்லை
நிலா

மழையில் நனைந்தாலும்
மலர்களின் வண்ணம்
அழிவதில்லை

கடலில் விழுந்தாலும்
கரைவதில்லை
சூரியன்

பெயர் அறியாப்
பறவையின் கானம்
அதிசய ராகங்களாய்

இயற்கையின்
ஆபரணம்
பனி முத்துக்கள்

காதலன்றி
வேறெதுவுமில்லை
கூண்டுக்கிளிகளின் வாழ்வில் !!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Jun-14, 8:38 pm)
Tanglish : iniyavai
பார்வை : 170

மேலே