கண்ணுக்கு தெரியாத கவிதை அவள் உயிர்

கண்ணுக்கு தெரியாத
கவிதை அவள் உயிர்

அந்த பெண்ணுக்கு தெரியாத
காதல் எந்தன் உணர்வு

மண்ணுக்குள் விதைத்திடும்
விதையை போலே

மன ஆழத்தில் புதைந்தது
அவள் எண்ணங்களே

விண்ணுக்குள் மறைந்து,
மறைந்து, வெளி வரும்
விமானத்தை போலே

மாலையில் மறைந்து
காலையில் தோன்றும்
கதிரவன் போலே

மறுபடி, மறுபடி தோன்றிடும்
எனக்குள் அவள்
நினைவுகளே

மறக்கவும் முடிவதில்லை,
அழிக்கவும் முடிவதில்லை
நினைக்கவும் தெம்பில்லை

என்ன செய்வதோ, கவிதை
உயிரே,

என்னை அழித்து கொள்வதோ
மண்ணில் புதைந்து போவதோ

சொல்லிடு நீயே, வெகு சீக்கிரமே
எந்தன் உயிரும் ஆவியாகிடும்
முன்னே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (27-Jun-14, 4:57 am)
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே