உந்தன் தாய்

அப்பா யார் என்று உனக்கு
அறிமுகபடுத்தியது, உந்தன் தாய்
அரிச்சுவடியை உனக்கறிவித்தது,
உந்தன் தாய்
அன்பு சுவடியை அடுக்கி தந்தது
உனக்கே என்று உந்தன் தாய்
அறிவுச்சுடரை உன்னுள் முதலில்
ஏற்றியது, உந்தன் தாய்
அறியாமையை அலசி கழுவியது
தன் அனுபவத்தால், உந்தன் தாய்
அன்யோன்யத்தை உனக்குள்
வளர்த்து விட்டது, உந்தன் தாய்
அருமை, நீ தான் அவளுக்கு
அடிமை ஆவாள் தாய் தன்
மக்களின் அன்புக்கு
அடுக்கடுக்காய் அவள் செய்தாள்
உனக்கு பெரும் நன்மையே
அதுவும் ஏதும் உன்னிடம்
எதிர்பார்க்காமலே
தாயில்லாமல் நீயில்லை
தானே எவரும் பிறப்பதில்லை