விளைநிலம் விலைநிலமாச்சு

விவசாயம்
இந்தியாவின் முதுகெலும்பு!
எத்தனை இந்தியர்களுக்கு தெரிந்திருக்கும்
இந்த உண்மை...
தெரிந்தாலும் மறந்து பல நாள் ஆயிற்று!.....
கூன் விழுந்து விட்டது நம் இந்திய முதுகெலும்பிற்கு!...

பூமித்தாயை கூறு போட்டு விற்றுக்
கொண்டிருக்கிறோம்!....

கதிர் விதைக்கும்
விளை நிலம்
கற்கள் பதித்த
விலை நிலமானது!...

பொன்விளையும்
மண் நிலத்தில்
விண்ணளவில்
உயர்ந்து நிற்கிறது
கண்ணாடிகள் பதித்த
கம்ப்யூட்டர் கம்பெனி!....

நதிகள் இணையும் என நினைத்தால்
தெருக்கள் இணைகிறது
அரசு மதுபானக் கடைகளால்!....

இல்லாத புழுவை
தேடிக் கொண்டிருக்கின்றன
விவரம் தெரியாத
கொக்குகளும் நாரைகளும்!.....

விஞ்ஞானம் மட்டும் வளர்கிறது
அவர்களுக்கு சோறு போடும்
விவசாயம் வளர்வதாக தெரியவில்லை!....

ஈன்றெடுத்த பெற்றோரையே
முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள்
காலடியில் தாங்கி நிற்கும்
பூமித்தாயையா கண்டு கொள்ளப் போகிறார்கள்!....

பணம் சம்பாதிக்க மட்டும் வழி தேடுகிறோம்
உணவு சம்பாதிக்க
என்ன செய்யப் போகிறோம்
என்றே தெரியவில்லை!....

ஒரு ஏக்கர் வாழை போட்டால் பத்தாயிரம் ரூபாய்,
ஒரு ஏக்கர் பிளாட் போட்டால் ஒரு கோடி ரூபாய்,
என்ற நிலையில் தான் போய் கொண்டிருக்கிறது
நம் இந்திய நிலைமை!.....

பிணி தீர்க்கும் இயற்க்கை காற்றை மறந்து
தீங்கு தரும் ஏசி காற்றை
காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்!....

மும்மாரி மழை பெய்த காலம் போய்
விவசாயியின் கண்ணீரில்தான்
நடக்கிறது சிறிதளவு விவசாயமும்!....

காய்களை விற்று காசோடு தந்தை
வருவாரா என மகன் காத்திருந்த
காலம் மாறி,
எந்த விவசாயி மகன்
நிலத்தை விற்று காசோடு வருவான்
என காத்திருக்கின்றன
பல கல்லூரிகள்!....

சோறு போடும் விவசாயியை
அங்கிகரிக்காத சமுகம்
அழிவை நோக்கி செல்வது உறுதி!....

துவண்டு கிடக்கும் விவசாயிக்கு
தோள் கொடுபோம்!.....
விவசாயம் காப்போம்!
வளம் பெறுவோம்!
நோய்களை கொள்ளுவோம்!
சாதனை படைப்போம்!

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (27-Jun-14, 1:53 pm)
பார்வை : 496

மேலே