ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி

வெட்ட வெளி வானத்தில்,
எல்லையில்லா பரப்பு.
எத்திசையும் ஒரு குணம் காட்ட,
அண்டசரா சரத்தின் வெளிவாசல்.
ஒளிந்து கிடப்பது ஓராயிரம்,
அதுவே ஆகாயம் !

காற்று எனும் கடுங் கோபக்காரி,
நதியோடு விளையாடி நட்புப்பேன,
மலையரசன் நடு நின்று நலம் காக்க,
வீசு தென்றலென வலம் வந்தாள் !

பொறியென விதை வளர்த்து,
சுடரென வெளிக்காட்டி,
சுகங்கள் உள்ளடக்கி,
உயிரதன் உண்மையில் ஒளிந்து,
உயிர் காப்பதும், நீர்ப்பதும் நெருப்பே !

நீர்நிலயாம் நதிப் பெண்ணவள்,
ஆவியென மாறி ,
ஆகாய வானரசனுடன் கலந்து, கூடி ,
பெற்றெடுத்தாள் மண் குளிர ,
மழைப் பெண்மகளை !

கூறு போட்டு கொத்திக் கிளறி,
பிளந்து கொடுமைகள் பல புரிந்தும் ,
அத்தனையும் அவதரிக்க,
அருமருந்தாய் அவதனிக்க,
பொருத்து பொறுமை காப்பவள்,
பூமித் தாய் !

எழுதியவர் : arsm1952 (27-Jun-14, 2:54 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 175

மேலே