அன்பின் வலிமை

அன்பின் வலிமை. ......


நட்பென்னும் நடைபாதையை
நான் கடந்த போது..
நந்தவனப் பூங்காற்றாய்
என்னைத் தழுவியது உன் நேசமடி!


தோல்விதனை நான் சுமந்த
வேளையில்
மனம் துவண்டிடாமல்....
தோள்மீது எனை சாய்த்து
சுமைதாங்கியாய் ஆனவளும்
நீதானடி!


கண்ணீர் கரைபுரண்டிடும் நேரமதில்
காரணங்கள் கேட்டிடாமல்....
எனக்காய் வருந்தி
காத்து கரைசேர்த்தவளும் நீ தானடி!


ஆங்காங்கே சிதறிக் கிடந்த என்
சிந்தனைகளை ஒன்றாக்கினாய்....
வீணாகிப் போன என் திறமைகளை
எனக்கே உணர்த்தினாய்....
ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் வர்ணனைகள்
கற்றிட செய்தாய்......


வெற்றியின் விலாசம் தேடும் சிறு
விட்டில் பூச்சி நான்..
விளக்கொளியை விலாசமாய்
எண்ணி
வீழந்து மடிந்திட பார்த்தேன்
என் விரல் பற்றி நீ காப்பாற்றினாய்..

உந்தன் விரல் தொட்ட
வினாடிதான் நான் உணர்ந்தேன்
"அன்பின் வலிமை என்னவென்று"

அன்புடன் நிஷா......

எழுதியவர் : நிஷா (28-Jun-14, 8:01 pm)
Tanglish : anbin valimai
பார்வை : 838

மேலே