பூஞ்சோலை

அக்கினி தேவனின்
உக்கிர பார்வைக்கு
பயந்து நான் ஒளிந்து
கொள்ள இடம் தேடினேன்

என் பேராசை கண்களுக்கு
அகப்பட்டது அழகிய சோலை

மரங்கள் அடர்ந்த காடு
உச்சியில் அழகிய
பறவைகளின் வீடு
அதன் பக்கத்திலே
தேன் கூடு

அடர்ந்த நிழலில்
நான் அடைந்தேன் தஞ்சம்

பூவாசம் புடைசூழ
வந்தாள் தென்றல்.
என்னை தீண்டினாள்,
தலை கலைத்தாள்,
உடை புகுந்தாள்,
கொஞ்சினாள், சீண்டினாள்.

என் களைப்பும் பறந்தது.
சிந்தை குளிர்ந்தது.
கவிஎழுத ஆவல் பிறந்தது.

பூக்களின் புன்னகையில் தான்
எத்தனை வண்ணங்கள்

ஓர் ஆண்பறவை
தன் இணையை
அழகாய் அலகால்
முத்தமிட்டது.
அந்த பெண்ணும்
தன் இணையின் இறகுக்குள்
சரணடைந்தது.

இரண்டு பூங்கொத்துகள்
இதழ்களால் இழைந்தது.
இடையில் வந்தான்
காற்றெனும் வில்லன்
இருவரையும் பிரிக்கிறான்.
பூவை பார்த்து கண்ணடிக்கிறான்

நல்லவேளை சிறிது நேரத்தில்
அவன் வேறிடம் போய்விட்டான்
மீண்டும் பூங்கொத்துகள்
கொஞ்ச ஆரம்பித்துவிட்டன.

என் காதலியின் நினைவை
தூண்டிவிட்டு வேடிக்கை
பார்த்தது பூஞ்சோலை.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (30-Jun-14, 10:50 am)
Tanglish : poonchoolai
பார்வை : 1944

மேலே