அன்றும் இன்றும்

அன்று …..

கனவு கட்டிடங்கள் கட்டி,

இயன்றவரை கல்வியும் கற்று

நிறைய நட்புகள் நிறைந்து,

உன்னத உறவினர்கள் சூழ்ந்து;

குதூகல குடும்பத்துடன் வசித்து;

குறைவான செலவுகள் செய்து;

அனுபவம் நிரம்பப் பெற்று,

அடக்கம் அதனுடன் பெற்று;

பண்புகள் அறிந்திருந்து,

பண்பாடு தனித்திருந்து

அன்புகள் வழங்கியும்

ஆறுதல் பெற்றும்

பெரியோரை மதித்தும்,

சிறிறோரே அணைத்தும்

மருந்துகள் குறைத்தும்,

மகத்துவம் நிறைந்தும்;

உள்ளதை கொண்டு

உருப்படியாய் வாழ்ந்தோம்;


இன்று ……

அணுவைப் பிளக்கும்
அறிவியலும் அறிந்து
விண்ணுக்கும் மண்ணுக்கு்ம்
உலா வருகிறோம்

உயர்ந்த ஊதியத்திற்காய்
உடைமைகள் மறந்து,
உறவுகள் தொலைத்து
புவி புலம் பெயர்கிறோம்

ஒருவழிப் பாதையாக பயணிக்கிறது
பலரின் திருமண பயணங்கள்
குழந்தைகள் குதூகலம்தான்
ஆனால் ஆயாக்களின் மடியில்

இலாபத்தைப் பெருக்கிட
தரங்கள் குறைக்கலாயின
வகையான உணவுகளை
வரிந்து கட்டப்படுகின்றன

குழப்பங்களும் கூடி
உறவுகள் கழிந்து
ஆசை பாசங்களை
அங்கிமிங்கும் தேடுகின்றோம்

களப்பணியில் ஒரு சாரார்
கலகம் உருவாக உழைக்கிறார்கள்
உச்சி மாநாடு நடத்திதான்
உலக அமைதி தேடுகிறோம்

கட்டிய மனைவியை
வீதியில் விட்டு விட்டு
கட்டவிழ்ந்த நடிகைகளுக்கு
கட்-அவுட்டுகள் ஆங்காங்கே…

எழுதியவர் : நெல்லை பாரதி (30-Jun-14, 12:36 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே