வாழ வழியறியா வாயில்லா பூச்சி

கொட்டும் மழையில் நனைகிறான்
குடையில்லாமல் அல்ல
குடிசையில்லாமல்:
மரண வேதனையில் துடிக்கிறான்
பசியினால் அல்ல
பாசம் காட்டயாருமில்லாமல் ;
கதறிக் கதறி அழுகிறான்
கவலையினால் அல்ல
கண்ணீர் துடைக்க கரங்களிலாமல் ;
ஈரநிலம் தேடி அலைகிறான்
தாகத்தினால் அல்ல
தன்தனிமை தீர்க்க தாயொன்று இல்லாமல் ;
ஐயோ !பாவம்
இவன் செய்த பிழைதான் என்ன ?
பாசம் காட்டிவாழ்ந்தான்
அவன் பாதைபுதையுற்று போனது
நேர்மையோடு வாழ்ந்தான்
அவன் வாழ்க்கை அர்த்தம்மற்றுப்போனது
காலம் பார்க்காமல் கடமையோடு உழைத்தான்
அவன் விழிகள் பார்வையற்றுப்போனது
ஒரு வேளை,,,
இப்படி பெரு நிலையை உருவாக்கியது ,
மனிதன் செய்த பிழையோ !
இல்லை ,
மனிதனை படைத்த இறைவன் செய்த பிழையோ!
இப்பாரில் '
"வாயுள்ள மனிதன் ,வாழ
பல தவறுகளை செய்கிறான்
அதை மற்றவருக்கு தெரியாமல் மறைக்கிறான் ;
வாயில்லா இவன்,உயிர்வாழ
வழியில்லாமல் வாயில்லா பூச்சியாய்
இம்மண்ணில் தவிக்கிறான் ???????????????

எழுதியவர் : பிரிசில்லா (30-Jun-14, 6:45 pm)
பார்வை : 89

மேலே