அநாகரிகம் எனும் தீ
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதையின் சூழல்:
இன்றைய தலைமுறைகளின் சிறு அவல நிலைகளை மையபடுத்தியது..
சிறுவயது மூளையில்
பெருவிஷயம் சேருது
கல்வியெனும் கடல்கூட
கானல் நீரா தெரியுது.....
அகவை ஆறு குழந்தையும்
அசைவ படம் பாக்குது
இளவயது சமூகம்
இரவல் கற்பை கொடுக்குது.....
கல்லூரி நட்பெல்லாம்
காணொளியை தேடுது
காணொளியில் காண்பெதெல்லாம்
கதிகலங்க வைக்குது.....
அலைபேசியும், தொலைபேசியும்
அனைவரிடமும் உள்ளது
அதனாலே ஆங்காங்கே
விபத்துக்களும் கூடுது.....
உண்மையென்று கூறியே
உப்பைகூட வைரமாக்குது
ஊழல் மிகு நாட்டிலே
ஊடல் படமும் விக்குது.....
விளம்பர பட அட்டைகள்
விதவிதமா குவியுது
விற்பனையழகியின் ஆடையோ
வேகமாக குறையுது.....
விளம்பரத்தின் மோகத்தால்
வேகமாக விக்குது
வாங்கியதை உபயோகிப்பதால்
வேகமாக சாகுது.....
கதையென்று தேடினால் - கணினியில்
காமக்கதைகளே கிடைக்குது
கட்டுப்பாடு மனிதகுலம்
கதிகலங்கி நிக்குது....
மது அருந்தி ஓட்டாதேவென்று
மாநில நிர்வாகம் சொல்லுது
மதுக்கடையும் பாரினையும்
மாநகரே நடத்துது....
புகை இலையையும், பிறவற்றையையும் - அரசு
தடை செய்ய கூறுது
தடை செய்த பொருளெல்லாம்
சந்தையிலே தொங்குது.....
படமென்னும் பேரிலே
பலகோடி அழியுது
பார்க்க வந்த மனிதனுக்கு
பல நரம்புகள் தேயுது.....
கட்டு கட்டா நோட்டிலுமே
கள்ள நோட்டு உள்ளது
ஓட்டுக்கு கூட காசு கொடுத்து
அரசியலே நடக்குது.....
இழிவு பட்ட மனிதகுலம்
இத்தனையும் தாங்குது
இன்னும் சொல்ல எழுத்தின்றி
இத்துடனே முடிக்கின்றேன்.....
தொடரும் நினைவுகளுடன்....
மணிசந்திரன்