சர்க்கரை உறையினுள்

சிறகுகளின் நிர்வாணம்
கண்டிரா
செதில்களும்... செதில்களின்
பூரணமறியா
சிறகுகளும் ... முன்கண்டு
தன்னிலை உணர்கிறது
வாரச்சந்தை
இறைச்சிமேசை கழிவுகளில்....!!!


நிலவாழ் பாசி
நீர்ப்பரப்பில்.... நீர்வாழ் பாறை
நிலப்பரப்பில்...
சிறைபிடித்துவிட்டதாய்
சொல்லி
தளும்பிச் சிரிக்கிறது
மேல்வர்க்க வீட்டு
கண்ணாடித் தொட்டிகள்....!!!!


இறந்து போயிருந்த
ஒரு பெருநத்தையின்
வெண் முதுகு
கவிழ்ந்திருக்கிறது
பூசையறைகளில்.... மென்புகை
நுகர்ந்தபடி
சைவப் படையலுக்காய்
காத்திருக்கிறார்
கடவுள்....!!!


முத்திரைக் குறிகளோடு
சிரித்துக் கொண்டிருக்கிறது
நாகரிகம்...
இகழப்பட்டதாய்
நான்
புதைத்துவிட்டுப்
போயிருந்த
பட்டாபட்டிகளும்
சுருக்குப் பைகளுமாய்......

எழுதியவர் : நல்லை. சரவணா (1-Jul-14, 7:46 am)
பார்வை : 82

மேலே