படம் பார்த்து பாடம் சொல்லவில்லை

கழிவென்றால் முகம் சுளிப்பர்
இழிவென்றும் இடித்துரைப்பர் !
கழிவகற்றும் மனிதரை இங்கே
அருவெறுப்பாய் பார்த்திடுவர் !

அடுத்தவர் கழிவிங்கே சேர்வதால்
தடுத்திடும் மண்ணால் தேங்கிடும் !
துவளாத உள்ளமும் அதைதுடைத்திட
தளராது உழைத்திடும் அதைநீக்கிட !

நம்கழிவை காண நாமே வெறுப்போம்
நான் சொல்வதையும் மறுப்பாரில்லை !
பாழும் வயிறுக்காக பாவம்இவரோ
பாதகம் இல்லையென பணியினிலே !

எவர்தான் நினைப்பார் இவர்களையும்
ஏற்றம்பெற செய்வார் அவர்களையும் !
அரசாணைகள் பறக்கும் அதிசயமாய்
நீதியும் பிறக்கும் இவர்க்கு உதவியாய் !

இருந்தும் நடப்பது இதுதானே இன்றும்
மருந்துக்கும் மாற்றம் இல்லையே ஏன் !
சுயநலமாய் சுழன்றிடும் இவ்வுலகிலே
பொதுநல தொண்டர்கள் இவர்கள்தானே !

பேருக்கு அங்குமிங்கு சில இயந்திரங்கள்
இயங்காது அவைகளும் பலநாள் இங்கே !
விண்ணுக்கு ஏவுகணை அனுப்பிடும் நாம்
மண்ணிலே மாற்றுவோம் இச்செயலையும் !

மதிப்போம் அடுததவர்க்கு உழைப்போரை
மனிதநேயம் காத்திடுவோம் உள்ளவரை !
படத்தை பார்த்து பாடம் சொல்லவில்லை
பார்க்கும் நீங்களே பாடமாக கொள்வீராக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Jul-14, 8:36 am)
பார்வை : 111

மேலே