நேற்றைப் போலவே இன்றும்

இன்றும்
நேற்றைப் போல
ஒரு சனிக் கிழமைதான்...
காற்றை வேட்டையாடிய
நாசித் துவாரங்களில்
நாயனம்
ஊதித் தள்ளும்
குழப்பம் ஒன்று
மெய்ம் மறந்து
மழை பொழிந்தது.....
பேரருவியை துகிலுரித்த
பிழைகளின் கொடூரம்
கண்களால்
சுழன்றது....
காடற்ற வழியில்
யாருமற்ற துணையுடன்
பேசிக் கொண்டே
திரிந்தவன்
முதுமையடைந்திருந்தான்,
சாகும் போது
முப்பதைத் தொட்டவன்....
இறந்தவனும்
மூப்பெய்துகிறான்
என்பது சனிக்கிழமைகளின்
ரகசியமாகக்
காக்கப் படுவதென்பது,
ஓய்வு நாளின்
திறந்த கல்லறையாய்
எப்போதும் ஒரு
பேரதிர்ச்சி....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (1-Jul-14, 8:26 pm)
பார்வை : 156

மேலே