தமிழ் என்

தமிழ் என் ..

தமிழுக்கு என் ..

தமிழோடு நான் ..

தமிழிலையேல் நான் ..

தமிழை தவிர எனக்கு ...!


இப்படியான தலைப்புகளில்..
என் கவிதை படைப்புகளில் மட்டும் !
தமிழை உண்டு வாழ்கிறேன்.. போலும்..!

ஏனெனில்...

college - க்கு time ஆயிடுச்சி
சாப்பாடு ready யா ? என்று அம்மாவிடம் ஆரம்பித்து..

பிறகு...

தூங்கபோகும் இரவு வேலையில்..
நண்பனுக்கு goodnight சொல்லும்வரை !

அந்நியனின் வேற்றுமொழி
அடம்பிடித்து.. இடம்பிடித்துவிட்டது!
என்னைப்போல் எல்லா தமிழர்களிடமும்...

என்னில் திருத்த முடியவில்லை எனினும்
அடிக்கடி வருந்துகிறேன்..

தமிழ் வாழ்க...

எழுதியவர் : சதுர்த்தி (2-Jul-14, 1:50 am)
Tanglish : thamizh en
பார்வை : 196

மேலே