இயற்கை

தேடி வரும் தென்றலும்
பூத்துக் குலுங்கும் பூக்களும்
எத்தனை இன்பமப்பா;
அதற்கு இசையாத
இதயமும் இல்லையப்பா!
ஓங்கி நிற்கும் மரங்களும்
குளிர்ந்த நீரோடைகளும்
எத்தனை அழகப்பா ;
அதற்கு அசையாதவர் யாரப்பா!
கருவறையில் பிள்ளையாய்
பூமி நம்மை சுமக்குதப்பா;
அதை அறியாத முடனாய்
நாம் இருக்க வேண்டாமப்பா !
செயற்கையை அணைத்து
இயற்கையை புறக்கணித்தால்
எதிர்காலமே உனக்கு எதிரப்பா ;
இதை உணர்ந்து வரும்
காலங்களில் நீ செயல்படப்பா!

எழுதியவர் : தேவகி ரவிச்சந்திரன் (2-Jul-14, 11:09 am)
சேர்த்தது : devakiravichandran
Tanglish : iyarkai
பார்வை : 191

மேலே