திருமண வாழ்த்துக்கவிதை

(எனதாருயிர் நண்பன் சபரியின் திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்துக் கவிதை)

சுமை தாங்கும் உன் தோள்களின் மேலே
சுகந்தரும் ஒரு சின்னப் பறவை...அதை
இமை போல் காப்பது உன் கடன் - என்றும்
அகந்தன்னில் ஏந்திச் செல் உன்னுடன்!

சிறகுகளின் கீழே தென்றல் வீசுவதால் இப்போது
உன் வேகத்தைத் தளர்த்திக் கொள்ளாதே -
....மேலே பற, இன்னும் தூரப் பற!
பிறகு வரும் நற்பலன்கள் யாவையும்
அன்போடு பங்குபோடு - பெரும்பங்கு பெண்ணிற்கு குடு!

இந்த நண்பனின் அன்பு நச்சரப்புகள் இவை மட்டுமே,

உன் பத்துவிரல் இடுக்கில் பத்திரமாய் இன்னும் பத்துவிரல்,
உன்னுடன் நடைபோட இன்னுமோர் நிஜ நிழல்,
நீ இமயம் ஏறி தடயம் பதிக்கும்போது, நின்று களிக்கும் ஓர் இதயம்,

இத்துணையும் உன் பேறு,
சுகம் வேறு, இன்பம் வேறு,
அதை யறிந்து பேரின்பம் எய்தி
வாழ்வில் என்றென்றும் முன்னேறு!

எழுதியவர் : வைரன் (3-Jul-14, 1:07 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : anbu nanbaa sabari
பார்வை : 1460

மேலே