சில மாதங்களுக்கு பின் அலுவலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
கொஞ்சம் மரங்கள் பூத்திருந்தன
பூந்தொட்டிகள் மண் நிரப்புவதற்காக
அடுக்கி வைக்கபட்டிருக்கிறது
மொட்டையடித்திருந்த புல்தரை
புசு புசுவென வளர்ந்திருக்கிறது
கற்பூரவள்ளி செடி இன்னும்
நான்கு கிளைகளை விட்டிருந்தது
புதிதாக துளசி செடியும் முளைத்திருந்தது
என்னுடைய மேசை அழுக்கு படிந்திருந்தது
அழியும் பேனாவில் எழுதியது அழியாமல் இருந்தது
மக்கள் முகத்திலிருந்த
முகமுடி மட்டும் மாறவில்லை !