தகாத உறவுகள் - நாகூர் லெத்தீப்

தகாத உறவுகள்
பாவத்தை
விளைவிக்கும்
செயல்கள்...........!
சமூகத்தில்
குழப்பம் விளையுதே
ஆசைகளை
வளர்க்குதே.........!
உணர்ச்சியை
கட்டுப்படுத்த மறந்திடும்
அவலச்செயல் இதோ.........!
ஒருவன்
கைபிடிக்க மறுகை
மற்றகை பிடிக்க
என்ன காரணம்...........!
தொடரும்
விபச்சாரம் மானத்தை
பறிக்கிறது
சிரிக்கிறது..........!
தர்மத்தை
மறந்து மனித
கூட்டம் தவறான
வழியில் செல்ல
என்ன காரணம்.........!
ஒழுக்கமற்ற
சிநேகம் ஆசையை
பரிமாறுகிறது
அசிங்கப்படுகிறது
சமூகத்தில்.........!
குற்றத்தை
வளர்க்கும்
செயல்கள் தடுப்பதும்
தண்டனை
கொடுப்பதும்
யார் கையில் உள்ளது.........!