மனம் என்னும் பறவை

" சிறு பறவை பறக்கிறது
நிலம் அதிர சிரிக்கிறது!
சிறகுதிரும் பொழுதெல்லாம்
இமை மட்டும் இசைக்கிறது
இரு வரியில் தரும்
வலியில்....
வழியோரம் இளைப்பார விழி
தேடும்! உறவூட்டும் உணர்வெல்லாம்
விழி பிடுங்கி வழியோட்டும்!
வலியோடு விழியோடும்! விழியோடு
வலியாடும்....
இனம் காட்டும் கரை
மேலே கவி என்ன?
கனவென்ன? நான் பாடும்
நிலையென்ன? நிலமதிலே நடப்பதிலே
விதிசொல்லும் வழியென்ன?
வழியென்ன??
பதராகும் பதவியிலே நிலை
கொள்ளும் நெரிசலிலெ தலை
மயிரும் தன்மானம் இனையாகும்!
வினைசெய்ய வழி இருந்தும்
மனம்சொல்லும் பதிலென்ன??
பதிலென்ன???
சிறு பறவை பறக்கிறது
நிலம் அதிர அழுகிறது!
சிறகுதிரும் பொழுதெல்லாம் உணர்வற்று
உறைகிறது இசை போடும்
வரியெல்லாம் நனைகிறதே
நனைகிறதே... "