தாரமும் தாயும்
![](https://eluthu.com/images/loading.gif)
பத்துமாசம்
சுமந்தவள்
தாய்....
என்னைப்
பக்குவமாய்
சீற்படுத்தியவள்
தாய்.....
ரத்த பாசம்
சகோதர
பாசம்
உயிரில்
காண்பித்தவள்
தாய்.....
பொய்யிற்கும்
மெய்க்கும்
பாடம்
தந்தவள்
தாய்......
உண்மை பேசி
உதவி
செய்ய
உதவியவள்
தாய்......
கரம்
பிடித்த
நாள் முதலாய்
வரம்
தருபவள்
தாரம்.....
மெய்தொட்ட
நாள்
முதலாய்
மெய்யாக
வாழ்பவள்
தாரம்.....
என் நலம்
பற்றியே
நினைத்து
வாழும்
இன்னொரு
ஜீவன்
தாரம்.....
பிள்ளையோடு
பிள்ளையாக
மாறிப்போன
என்
குழந்தை
தாரம்......
கஷ்டம்
வந்தால்
விலகாமல்
நஷ்டம்
வந்தால்
ஓடி ஒளியாமல்
கைதூக்கி
விடுபவள்
தாரம்......