மழலை

விலையுயர்ந்த பொருள் ஒன்றைத்
தொலைத்து வந்து நின்றேன்! - என்
மனம் கவர்ந்த பொருள் அது!
மீள முடியவில்லை
இழந்த மனது தவித்தது!
என்ன இருந்தாலும் நான்
இன்னும் கொஞ்சம்
கவனமாய் இருந்திருக்கலாம்!

காலை முதல் இரவு வரை
முகமும் மனமும் வாடி நின்றேன்!
அப்பா சொன்னார், "விடம்மா... நிகழ்ந்ததை மாற்ற முடியாது"
அம்மா சொன்னாள், "சாப்பிடு முதலில்! வயிறு நிறைந்தால் மன பாரம் குறையும்!"
என்னவர் சொன்னார், "விடு! அதே போல் வேறொன்று வாங்கி விடுவோம்"
யாருக்கும் செவி சாய்க்கவில்லை நான்!

திடீரென்று என்னவோ புரிந்து விட்டாற்போல்
எழுந்து என் முன்னே வந்து
ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டி
உரத்த குரலில் மழழை மொழியில்
நீ சொன்னாய்...
"இத்த பித்த ஏய் பை சித்தா சித்த பிஷா
வா ப சி பி பி அஷிகி அஷிகி ஷாப்கு...."

அனைத்தும் மறந்து சிரித்து விட்டேன்
வலியில்லை... பாரமில்லை...
நினைவெங்கும் நீ மட்டுமே! :-)

எழுதியவர் : (3-Jul-14, 5:30 pm)
Tanglish : mazhalai
பார்வை : 267

மேலே