தாய்மை

நான்
உறங்கிய விழிகள் பார்த்து
நீ
உறங்கும் நேரம்தான்
நம்மை படைத்த
கடவுள் உறங்கும்
நேரமாகிப்போகிறது......!!

நிழல் தீண்டிப்போனாலும்
நீ தீண்டிப்போனதாய்
நினைவூட்டிப்போகிறது
உன்
தாய்மையின் ஸ்பரிசம்......!!!

பூக்களெல்லாம் ஏங்குகின்றன
செடியில் பிறந்ததைவிட
உன்
மடியில் பிறந்திருந்தால்
எவ்வளவு சுகம் என்று

இறக்காமலே
சொர்க்கத்தை எட்டும்
பாக்கியம் பிறக்கும்
உன் மடியில்
கிடந்தால் மட்டுமே.........

வலிக்கும் போதும்
வலிக்காமல் இருப்பதுபோல்
இருக்க
உன்னால் மட்டுமே முடிகிறது......

உதிரும் பூக்களெல்லாம்
பூஜை செய்வது என்னவோ
உனக்குத்தான்....!!!
உதிர்கையில்
தாங்கும் நிலையில் - நீ
இல்லையென்றாலும்
இறக்கும்போது
உன்னை தாங்கும்
மண்ணாய் மக்கி
மாறி - உனக்குள்
ஊறிவிட வேண்டுமென்பதே
வேண்டுதலாகிப்போகிறது
வேர்களுக்கும்கூட ...........!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (2-Jul-14, 3:55 pm)
Tanglish : thaimai
பார்வை : 279

மேலே