பிடித்தது பெண்மை

காலோடு கொலுசு தாளமிட்டு ஆடுகையில்,
பிடித்தது கொஞ்சம் பெண்மை..!
தோளோடு கூந்தல் தொட்டு தொட்டு உரசையிலே,
பிடித்தது கொஞ்சம் பெண்மை..!
காதோடு ஜிமிக்கி, தூளி போல் ஆடுகையில்,
பிடித்தது கொஞ்சம் பெண்மை..!
வளைவோடு போட்ட கோலம், அழகோடு
எனை பார்த்து சிரிக்கையிலே,
பிடித்தது கொஞ்சம் பெண்மை..!
ஆசையோடு அன்னை இட்ட
மருதாணி வாசத்தில்..,
பிடித்தது கொஞ்சம் பெண்மை..!
ஆனாலும்.. !?,
கண்ணெதிரே நீ வருகையில்,
நாணத்தோடு நான் தலை குனிகையிலே,
மிக மிக அதிகமாய் பிடித்தது பெண்மை...!!! :-)