என்னிதயம்

நீ விட்டுச்சென்ற என்னிதயம்,
இன்னமும் துடிக்கின்றது
அன்பே உன் வருகைக்காக;

புலம்பெயர்ந்த இதயம்,
மீண்டும் குடிவர மறுக்கிறது
சொந்த கூட்டிற்குள்;

வரும்பாதை பார்த்திருக்கும்
நன்றியுள்ள பிராணி போல்
வெட்டவெளியில் காத்திருக்கும்
இதயம்;

நா உலரத் தொடங்கிவிட்டது;
பால்வெளி நிறைக்கும் ஒளியை
மனம் உணரத்தொடங்கியது;
அடுத்து,
உடல் உலர்வதற்குள்
நீயருகே வந்திடு பெண்ணே;

எழுதியவர் : பசப்பி (4-Jul-14, 10:45 am)
Tanglish : ennithayam
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே