மணக்க வேண்டும் உனை
மார்புற தழுவிடும்
மழைத்துளியே!
என் மனங்கவர்
மாமழையே!
அனுமதியின்றி
ஆடை நெகிழ்த்தி
அவசரமாய்
அதற்குள் நுழைந்து
ஆனந்தமாய்
அலைக்கழிக்கும்
அழகு காதலா....
என்ன அவசரம்?
அழகாக்கி
உடனே
அழுக்காக்கி விடுகிறாய்...
இதுவே உனக்கு
வாடிக்கையோ,
வரும்பொழுதெல்லாம்....
சிந்தை மயக்கும்
சிருங்கார காதலா..
சில்லென கலந்ததும்
சிறகடித்து விடுகிறாய்...
சிறைபிடிக்கும் ஆசையில்
சிறகசைக்கிறேன்,
நானும் உன்னோடு...
தலைக்குள் தரையிறங்கி
தண்டுவட ரோடேறி
முதுகின் வழி முத்தமிடும்
உன்
ஒவ்வொருத்துளிக்கும்
ஓராயிரம் முத்தங்கள்...
உன்னையே
மணிகளாக்கி
மார்பிலே
மாலை கோர்த்து
மகிழ்ச்சியுடன்
வாழ்ந்திருக்க
மணக்க வேண்டும்
உனை!
மாமழையே
மீண்டும் வா..
கரைந்திடும் காதலோடு
மறைந்திடுவோம்
நமக்குள் நாமாய்…