காதல் ஜெயித்தது 3

அம்மனை வழிபட்டு விட்டு வந்தவள் வளையல், பின் , பொட்டு விற்கும் கடைக்கு சென்றாள். அவளுக்கு பிடித்ததையும், தோழிகளுக்கு பிடித்ததையும் வாங்கினாள். அங்கே அவளுக்கு மிகவும் பிடித்த ராட்டினம் தூரி நிறைய பேரை வைத்து சுற்றி கொண்டிருந்தது. தோழிகளோடு தூரி விளையாடினாள்.
வினோத்தும் நிதிசும் கோவிலில் தான் இருந்தனர். அவர்களுக்கு அன்பை கண்டாலே பிடிக்காது.
டேய் நிதிஷ் அங்க பாத்தியாடா, ஒரு காக்கா உக்காந்திருக்குதுடா, என்றான் வினோத். டேய் இவன் சத்யாவ சைட் அடிக்க வந்திருக்காண்டா. ஏன்டா நிதிஷ், சத்யா இவனை திரும்பி பார்ப்பாளா? பல்லு மட்டும் தாண்டா வெள்ளையா இருக்கு.
இவன்கிட்ட என்னடா இருக்கு. ஓட்ட சைக்கிளை தவிர. செல் போன் கூட கிடையாது. படிப்பும் இல்லை. பணமும் இல்லை. இவனெல்லாம் எந்த தைரியத்திலடா சத்யாவ பார்க்க வர்றான் என்று கிண்டலடித்தார்கள்.
இவர்களிடம் பேசினால் இனி சண்டையில் தான் முடியும் என்று நினைத்தவன் பேசாமல் வேறிடம் நகர்ந்தான்.
எதிரில் சத்யா வந்து கொண்டிருந்தாள். மிக அருகில் பார்க்கும் போது தான் பார்த்தான். அவள் கன்னத்தில் சிவப்பாக தெரிய, என்ன சத்யா கன்னத்தில ரத்தம் வருது போலிருக்கு பாரு என்றான். அவள் தொட்டு பார்த்து விட்டு, ஆமாம் , பருவை கிள்ளி விட்டேன் என்று எதேச்சையாக அவளும்கூறிவிட்டு சென்றாள்.
இதை பார்த்த இரண்டு ஜோடி கண்கள் சத்யாவையும் அன்பையும் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் அவள் வீட்டில் போட்டுகொடுத்தது.
வீட்டிற்கு போனால் வரப்போகும் கலவரம் பற்றி தெரியாமல் அவள் ஜாலியாய் தோழிகளோடு பேசிக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்க்குள் நுழைந்ததும், சத்யா இங்க வா என்றார் அவள் அப்பா. அருகே சென்றதும் அவள் அப்பா அறைந்ததில் அவள் நிலைதடுமாறி விழுந்தாள்.
எதற்கு அடித்தார் என்றே புரியாமல் கன்னத்தை பிடித்து கொண்டே அழுதபடி எழுந்தாள்.
உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்த அன்னாடங்காய்ச்சி பயகிட்ட கன்னத்தை காட்டி பேசுவ?
அப்பா இல்லப்பா, அது வந்து என்றவளை, நிறுத்து நான் என்ன பொய்யா சொல்றேன். நானுன் தான பார்த்தேன் என்றார்.
வீட்டிற்கு வந்த விருந்தினர் முன் அவள் கேவலப்பட்டாள். செய்யாத தப்பிற்கு தண்டனை பெற்றாள்.
எந்த தப்பும் செய்யாத போது எனக்கு ஏன் இந்த தண்டனை என்று அழுதவாறே உறங்கிபோனாள்.
இவள் இந்த ஆண்டு படிப்போடு படித்தது போதும், எதாவது மில்லில் ஒரு 3 வருடம் சேர்த்து விட்டு பின் திருமணத்தை முடித்து விட வேண்டியது தான். வீட்டில் வெச்சிருந்தா இவ பேரை கெடுத்திருவா.
படிப்புக்கு முற்று புள்ளி விழபோவதயோ , தான் வாழ்க்கையே திசை மாரபோவதையோ அறியாமல் அடுத்த அறையில் அழுதபடி உறங்கிபோனாள்.

தொடரும்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (5-Jul-14, 5:46 pm)
பார்வை : 127

மேலே