கார் இருளில் ஒரு ஓளி

காரிருளில் ஒரு ஓளி
நூலிழையில் வந்தது
சன்னல் வழி

கண் தூக்கம் கலைத்தது
அவ்வொளி, நல் கனவுகள்
சிதைந்தது அந்த நொடி

வெகு கோபம் கொண்டு
பார்த்தேன் சன்னல் வெளி

வெண் நிலவு சிரித்தது
களங்கம் இல்லாமல்

வெண்ணிலவே, என்
நித்திரை கலைத்தது
ஏனோ? என செல்ல கோபத்துடன்
திட்டி தீர்த்து விட்டு
தொடர்ந்தேன் நித்திரையை

கனவினில் வெண்ணிலவினில்
இருந்து ஒரு தேவதை,

இறங்கி வந்தாள், நுழைந்தாள் அறையினுள்
என்னில் கலந்தாள் ஒரு நொடியினில்

இன்ப கனவினில், இனிய உறவுகளில்
அந்த தாலாட்டினில், விடி காலை
வரை.....!

பால் வாங்கனும், சீக்கிரம் எழுந்துருடா
அம்மாவின் குரல்....!

கடும் கோபத்துடன் எழுந்தேன்

அட, கால கார்த்தாலே உன்கிட்டே
பெரிய ரோதன, தினம் இதே தொல்லை

வெண் நிலவு ஓளி கலைத்த நித்திரை
தொடர்ந்தது ஒரு தேவதை வரவுடன்

என் உறவு கலைத்த நித்திரை, முடிந்தது
என் கோப உரைகளுடன்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (6-Jul-14, 8:43 am)
பார்வை : 220

மேலே