நினைவில் நிறுத்திக்கொள்ளடா 

நல்லவனே !!
நான் உன்னை
நினைத்ததாய் கூறிடும்
நற்பொழுதுகளில் எலாம்
உனக்கு ஆயுள் 100 என 
பூரி போல பூரித்துப்போகும்
பூவையென் பொன்னானவனே !

நினைப்பதனால் நின் ஆயுள்
100 வரை நீளுமென்ற
நிச்சயித்த நியதி இருக்குமென்றால்
நிச்சயமாய் என் இனியவனே !
சாகா வரம் பெற்ற சஞ்சீவி
நீயென்பதை நிதர்சனமாய் நானுரைப்பேன்.

உலக உயிரினங்கள் அத்தனைக்கும்
ஏன்,உயிரினங்களை எல்லாம்
படைத்ததாய் பீற்றிகொள்வோர்க்குமே
ஆயுள் கிடங்கு நீதான் 
ஆயுள் பட்டுவாடா புரியவேண்டியதிருக்கும்
பார்த்து, நினைவில் நிறுத்திக்கொள்ளடா !
இந்த பாவப்பட்ட பிறவியையும் 
கொஞ்சம்......

எழுதியவர் : (6-Jul-14, 9:13 am)
பார்வை : 102

மேலே