துவேசம்
![](https://eluthu.com/images/loading.gif)
விரல்கள் தீண்டினால் மட்டுமல்ல
விருப்பமில்லாமல்
நகங்கள்
தீண்டினால் கூட
நெருப்புக்குளியல்தான்
ஒவ்வொரு பூக்களுக்கும் .............
நகரும்சாக்கில் இடித்துவிட்டு
ஒதுங்குவதாய் நினைத்து
உரசிவிட்டு போகும்
மனிதர்களில் தெரிகிறார்கள்
இறந்துபோன அரக்கர்கள் எல்லாம் .............
துணிவில்லாதவர்களின்
தனிமை மேலானது
துணிந்து தவறுகள் செய்யும்
வழித்துணையைவிட.............!!!
அருகில் அமரும்வரை தெரிவதில்லை
அரக்கர்களின் அசுர முகம்....
நிழலின் வேஷம்
நிஜமாக மாறும்வரை............
இருட்டு ஒன்றும்
அவ்வளவு பயங்கரமானதல்ல
வெளி(ச்ச) வேஷம் மனிதர்களை போல............
கவிதாயினி நிலாபாரதி